கிசு கிசுவிற்கு பெயர் போன நடிகருடன் அந்த மாதிரி போஸ் கொடுக்க சொன்ன “பத்ம ஸ்ரீ” இயக்குநர்..!! மனம் திறந்த நடிகை..!!

Photo of author

By Divya

கிசு கிசுவிற்கு பெயர் போன நடிகருடன் அந்த மாதிரி போஸ் கொடுக்க சொன்ன “பத்ம ஸ்ரீ” இயக்குநர்..!! மனம் திறந்த நடிகை..!!

தமிழ் திரையுலகில் 80,90களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ராதா.’அலைகள் ஓய்வதில்லை’ என்ற காதல் காவியம் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.தனது நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்த படம் வெளியான அதே ஆண்டு அதாவது 1981 ஆம் ஆண்டில் கமலுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து அசத்தினார்.

மடல் அழகிகளுக்கு போதை மருந்து கொடுத்து அவர்களின் உடல்களை பயன்படுத்தி இந்தியாவிற்கு வைரங்களை கடத்தும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக டிக் டிக் டிக் வெளி வந்தது.

இப்படத்தை பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாரதிராஜா அவர்கள் இயக்கினார்.கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படம் எடுப்பதில் பெயர் போனவர் பாரதிராஜா.இவர் இயக்கத்தில் வெளிவந்த “பதினாறு வயதினிலே” காலத்தால் அழியாத பொக்கிஷம்.தொடர்ந்து கிராமத்து கதைகளை இயக்கி வந்த பாரதிராஜா தன்னால் திரில்லர் படத்தையும் எடுக்க முடியும் என்பதை சிவப்பு ரோஜாக்கள் மூலம் நிரூபித்தார்.பின்னர் அன்றைய காலகட்டத்தில் வித்தியாசமான கதைக்கரு கொண்ட டிக் டிக் டிக் என்ற படத்தை இயக்கி தமிழ் திரைத்துறையை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார்.

மேலும் அந்த காலகட்டத்தில் நடிகைகள் நீச்சல் உடை அணிந்து நடிப்பது சாதாரண விஷயம் அல்ல.இன்று நீச்சல் உடை காட்சி சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

படத்திற்காக ஆடை குறைவாக அணிந்து நடிக்கும் நடிகைகள் நிஜத்தில் கூச்சசுபாவம் கொண்டவர்கள்.அந்த காலகட்டத்தில் பாடலுக்காக மட்டும் ஒரு சில நீச்சல் உடை காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரில் அப்படத்தின் நாயகிகளான ராதா,மாதவி,ஸ்வப்னா ஆகிய மூவரும் நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இருப்பார்.இதில் ஹைலைட் காதல் கிசு கிசுக்களுக்கு பெயர் போன கமல்ஹாசன் அவர்களை சுற்றி இந்த மூவரும் நீச்சல் உடையில் நிற்பது போன்ற போஸ்டர் அந்த காலகட்டத்தில் படு வைரலானது.

இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை அப்படத்தில் நடித்த நடிகை ராதா பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்த படத்தில் நடித்தது மறக்க முடியதா அனுபவம் என்றும் நீச்சல் உடையில் நடிப்பது சாதாரண விஷயம் அல்ல.ஆனால் நீச்சல் உடையில் நடிப்பது தங்களின் வேலை.இருந்தபோதிலும் அது எங்களுக்கு பெரும் போராட்டமாக இருந்தது.

இந்த நீச்சல் உடையை கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதி அவர்கள் தான் அழகாக வடிவமைத்து கொடுத்தார் என்று ராதா மனம் திறந்து பேசி இருக்கிறார்.