குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை உடனே போட்டுக்கொள்ளுங்கள்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதன் பிறகு அதிகளவு உயிர் சேதமும் ஏற்பட்டது.பல பேர் குடும்பங்களை இழந்து தவித்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.அதனால் அரசு நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .அந்த நடவடிக்கையின் பேரில் குடிசை பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மும்பையில் புதிதாக 11 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது.இந்த நோயினால் ஓரு குழந்தை உயிரிழந்துள்ளது என கூறப்படுகிறது.
மேலும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் தான் தட்டம்மை பரவல் அதிகமாக காணப்படுகின்றது.
குழந்தைகளை தான் அதிகளவு பாதிக்கின்றது.இந்த தட்டம்மை நோய்க்கு ஆரம்பக்கட்டத்திலேயே உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.