கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

Photo of author

By Parthipan K

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

Parthipan K

Updated on:

the-district-is-famous-for-selling-cannabis-women-who-continue-to-hand

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன்  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அந்த உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (29) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது போன்ற நிகழ்வுகளில் மீண்டும் யாராவது ஈடுபட்டால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார்  எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.