cricket: இந்திய அணி டி 20 போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி 20 போட்டிகளில் சாதனை மேல் சாதனைகளை இந்தியாணி குவித்து வருகிறது.
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது அதன் முதல் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில் முதலில் டாஸ் வென்றது தென்னாபிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 47 பந்துகளில் சதம் விளாசினார். திலக் வர்மா நன்றாக விளையாடி ரன் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் அணியின் எண்ணிக்கை 202. அதனை துரத்தி களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி 141 ரன்களில் அவுட் ஆனது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2024 ம் ஆண்டு டி20 போட்டிகளில் அதிக வெற்றி சதவீதத்தை வைத்துள்ள அணிகளில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை 23 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 22 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் வெற்றி விகிதம் 95.6 சதவீதமாக உள்ளது. இதற்கு முன் 2023 ல் உகாண்டா அணி அதிக சதவீதம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.