வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கத்திற்கு வரும் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து! அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்!
தற்போது உள்ள சூழலில் அனைவரிடமும் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் என வந்துவிட்டது.அருகில் சென்றாலும் வாகனத்தில் செல்லும் நிலை உருவாகி வருகின்றது. இதானால் அதிகளவு சுற்றுசுழல் மாசு ஏற்படுகின்றது. அதனால் தெலுங்கானாவில் சுற்றுசுழலை பாதுகாப்பதற்காக மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பயன்படுத்துவதற்கு மூன்று இரட்டை அடுக்கு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 65 பேர் அமரக்கூடிய இருக்கை வசதி உள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் பயணிக்க முடியும்.இந்த பேருந்தை மொத்தமாக சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 2.5 மணி நேரம் தான் ஆகும். இந்த பேருந்துகள் ஓவ்வொன்றும் ரூ 2.16 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் முழுவதும் மின்சார பேட்டரியில் இயங்கும்.
பேருந்து சேவை வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய சின்னங்கள் உள்ள சுற்றுப்பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் பெங்களூரில் இது போன்ற மின்சார பேருந்து நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.