இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!!
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அரசியல் சூழல் குழப்பமான நிலையில் சென்றடைந்ததை அடுத்து சிவசேனா கட்சியானது ஏக் நாத் ஷிண்டே-விற்கா அல்லது உத்தவ் தாக்கரே விற்கா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது.பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து இவ்வாறு அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே விற்கு தான் என உத்தரவிட்டதை அடுத்து உத்தவ் தாக்கரே பெரும் பின்னடைவை சந்தித்தார்.
குறிப்பாக சிவசேனா கட்சியானது யாருக்கு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஆனது யார் உண்மையான சிவசேனா என்பதை நிரூபியுங்கள் எனக் கூறியது. அந்த வகையில் ஏக் நாத் ஷிண்டே ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் எனத் தொடங்கி 18 எம்பிக்கள் வரை ஆதரவு கடிதத்தை வழங்கினர். அதுவே உத்தவ் தாக்கரே விற்கு 15 எம்எல்ஏக்கள் ஐந்து எம்பிக்கள் ஆகியோர் பிரமாணம் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
இவ்வாறு தாக்கல் செய்ததில் கட்சி பெயர் மற்றும் கட்சியின் சின்னம் அனைத்தையும் ஏக் நாத் சின்டேவிற்கு வழங்கினர். மேலும் ஏக் நாத் சிங் டே 76 சதவீத எம்எல்ஏக்களின் வாக்குகளை பெற்றுள்ளார். அந்த வகையில் பார்க்கும் பொழுது மகாராஷ்டிராவை போல தமிழகத்திலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கட்சி பிரிவினை உள்ள நிலையில், இதே போல் பலத்தை காட்ட நினைத்தால் அதிகளவு எம்எல்ஏக்களின் ஆதரவு எடப்பாடி பக்கம் தான் உள்ளது. எனவே கட்சியின் சின்னம் கட்சி உள்ளிட்ட அனைத்தும் கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும் எனக் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனாவிற்கு மிகவும் பக்க பலமாக இருந்ததால் தான் தேர்தல் ஆணையத்தையே தற்பொழுது தனது உத்தரவுவிற்கு இணங்கும் படி தலையை ஆட்ட வைத்துள்ளது.அதை வைத்து பார்க்கையில் இங்கும் அதுபோல நிலை ஏற்பட்டால் கட்டாயம் பாஜக எடப்பாடிக்கு அதிகளவு ஆதரவு தெரிவிக்கும் என கூறுகின்றனர்.