பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி!!

Photo of author

By Savitha

பாஜக கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது! மேற்குவங்க மாநில முதலமைச்சர் பேட்டி!
நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது பற்றி மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் சட்டசபை தேர்தல் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அதாவது மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பாஜக கட்சி 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.
இதையடுத்து பாஜக தோல்வியை குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்று கூறிய அவர் “அடுத்து சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேர்தலிலும் பாஜக தோல்வியடையும் என்று நினைக்கிறேன்” என முதலமைச்சர் மம்தா பேனர்ஜி அவர்கள் கூறியுள்ளார்.