உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்க மருத்துவர் சொன்ன ஜூஸை செய்து தினமும் குடிங்க.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.மருந்து,மாத்திரையை வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவதைவிட இந்த ஒரு பானத்தை தினமும் செய்து பெருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)மாதுளம் பழம் – ஒன்று
2)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
3)புதினா இலைகள் – நான்கு
4)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு மாதுளம் பழத்தை நறுக்கி அதன் விதைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு மாதுளம் பழ விதைகளை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து நறுக்கிய பெரிய நெல்லிகாய் துண்டுகளை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.
அடுத்து நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.பின்னர் இந்த ஜூஸை கிளாஸிற்கு வடித்து பருக வேண்டும்.இந்த ஜூஸை பருகி வந்தால் பிபி,சுகர் போன்ற நோய்கள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சிறுகுறிஞ்சாண் இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சிறுகுறிஞ்சாண் இலை பொடியை கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் முழுமையாக குணமாகும்.
தேவையான அளவு:-
1)செம்பருத்தி இதழ்கள் – நான்கு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு செம்பருத்தி இதழ்களை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.செம்பருத்தி பானம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் செம்பருத்தி பானத்தை பருகலாம்.