தொப்பையை குறைக்க எளிய வழி! தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்

Photo of author

By Gayathri

தொப்பையை குறைக்க எளிய வழி! தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்

Gayathri

The easiest way to reduce belly!

தொப்பையை குறைக்க எளிய வழி! தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்

தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் இளைஞர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.அந்த பிரச்சனைகளில் ஒன்று தான் தொப்பை.உடல் உழைப்பு குறைந்துள்ள நிலையில் தவறான உணவு பழக்கவழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.அதுவும் வயிற்று பகுதி பெரியதாகி தொப்பையை உண்டாக்குகிறது.

அதுமட்டுமின்றி பெண்களும் தங்களது தினசரி வாழ்க்கையில் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் அது அடி வயிற்றில் கொழுப்பை அதிக அளவு சேர்க்கிறது.அதனால் பெரும்பாலான பெண்களுக்கும் தொப்பை பெரிய பிரச்சனையாக அமைந்துள்ளது.

திருமணமாகவுள்ள மற்றும் ஏற்கனவே திருமணமானவர்களுக்கு இந்த தொப்பை பிரச்சினை பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.இதை இயற்க்கை உணவை வைத்து சரி செய்யவும் வழியுள்ளது.

கொள்ளுப் பருப்பை ரசம் வைத்து அருந்த ஜலதோஷம் குணமாகும் மற்றும் கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.  இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன்,மாதவிடாய் சரியாக வராத பெண்களுக்கு  சரிப்படுத்தும். பிரசவ காலத்தில் ஏற்படும் அழுக்கை வெளியேற்றும்.

வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு  குணப்படுத்தும்.

உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளு.