ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு! பரபரப்பில் அதிமுக!
சென்ற மாதம் அ.தி.மு.க. ஒன்றை தலைமை பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைதொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து இந்த வாரம் இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்நிலையில் இம்மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம்என்ற சிறப்பு தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த முடிவுகள் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவின் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இருவர்களின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் விரைவில் இருவருக்கும் விசாரணைக்கான நோட்டீசை அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.