மாணவ மாணவிகளே தயாராக இருங்கள் நாளை முதல் தொடங்குகிறது! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
167

தமிழகத்தில் கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்தது இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியான சூழ்நிலையில் இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றார்கள் இதனைத் தொடர்ந்து 12ம் வகுப்பு முடித்த மாணவர் மாணவிகள் கல்லூரியில் இணைந்து படிக்க தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை மாணவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பம் செய்தவர்கள் 14ஆம் தேதி அதாவது நாளை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின்னர் மறு கூட்டலுக்கு வரும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநீ இப்படி போட்டா நான் அப்படித்தான் அடிப்பேன்! இங்கிலாந்து அணிக்கு ரோஹித் சர்மா எச்சரிக்கை!
Next articleஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு! பரபரப்பில் அதிமுக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here