காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

Photo of author

By Sakthi

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்!!

Sakthi

Updated on:

 

காரை அகற்றாமல் சாலையை சீரமைத்த ஊழியர்கள்… திருப்பூர் மாநகராட்சியில் நிகழ்ந்த சம்பவம்…

 

தமிழ்நாடு முழுவதும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் ஒரு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரை அகற்றாமல் ஊழியர்கள் சாலையை சீரமைத்த சம்பவம் நடந்துள்ளது.

 

தற்பொழுது தமிழ்நாடு முழுவதிலும் சாலையை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதைப் போலவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சாலையை சீரமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

 

தற்பொழுது வெயில் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மழை காலம் வருவதற்குள் சாலையை சீரமைத்துவிட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் மிக வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி பகுதியின் எல்லைக்கு உட்பட்ட பின்னி காம்பவுண்ட் வீதியில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலையை சீரமைக்கும் பணிகள் போக்குவரத்துக்கு தடை இல்லாத வகையில் இரவில் நடைபெற்றது.

 

அப்பொழுது சாலையில் வேறு வேறு இடங்களில் இரண்டு பக்கங்களில் கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கார்களை அகற்றாமல் அந்த கார் நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டு மற்ற இடங்களில் உள்ள சாலையை ஊழியர்கள் சீரமைத்து சென்றனர். பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும்தான் சாலைகள் சீரமைக்கப்படுகின்றது. அதிலும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.