77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

0
36

77 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்..! செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்!

நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர்.இதற்கு முன்னதாக இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றி நரேந்திர மோடி அவர்கள் 2 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாட்டின் மூவர்ண கொடி ஏற்றி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.அதே போல் இந்த ஆண்டும் செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து தற்பொழுது நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தி வருகிறார்.மேலும் இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.400க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள்,உடவர் உற்பத்தியாளர் அமைப்பு திட்டத்தின் 250 பிரதிநிதிகள்,பிரதமரின் கிஷன் சம்மன் நிதி திட்டம் மற்றும் பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றில் தலா 50 பங்கேற்பாளர்கள் என மொத்தம் 1800 பேர் தங்கள் வாழ்க்கை துணையுடன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டிருக்கின்றனர்.செங்கோட்டையில் நடைபெறும் விழாவை காண ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 75 ஜோடிகள் பாரம்பரிய உடையில் பங்கேற்பதற்காக வந்துள்ளனர்.இந்நிலையில் பிரதமர் தேசிய கொடியை ஏற்றியதும் இந்திய விமானப்படையின் 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது.இந்நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் 10000க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.