பண மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த வழக்கு!! சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!!

Photo of author

By Savitha

பண மோசடி, மிரட்டி பணம் பறித்தான மற்றொரு வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

பிரபல தொழிலதிபர் மல்விந்தர் சிங் மனைவி ஜப்னா சிங்கிடம், சுகேஷ் சந்திரசேகர் அரசின் உயர் அதிகாரி போல நடித்து ₹3.5 கோடி மிரட்டி பணத்தைப் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிராக, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையை நீதிபதி தேவேந்திர சிங் ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.