நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடை அகற்றக் கோரி வற்புறுத்திய தேர்வு அலுவலர்கள்! போலீசில் புகார் அளித்த பெற்றோர்!

0
136
The examination officers forced the students to remove their underwear when they came to write the NEET exam! Parents who complained to the police!
The examination officers forced the students to remove their underwear when they came to write the NEET exam! Parents who complained to the police!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடை அகற்றக் கோரி வற்புறுத்திய தேர்வு அலுவலர்கள்! போலீசில் புகார் அளித்த பெற்றோர்!

அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு 17.07.2022 அன்று  நாடு முழுவதும் நடந்து முடிந்தது. தமிழகத்திலிருந்து தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் நேற்று நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் அதன் பிறகு தேர்வு நிலையத்திற்கு வந்த மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

மேலும் பின்னர் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடைபெற்றது தேர்வு அறைக்குள் மாணவ மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு 95% தேர்வு எழுதியதாகவும் 18,72,343 பேர் இந்த நிலையில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்த தேர்வு எழுதினார் என்றும் தேசிய தேர்வு முகமை மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  இந்த தேர்வுக்கான விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளிடம் உள்ளாடையை அகற்றக் கூறி தேர்வாளவர்கள் வர்ப்புரித்தியதாக தேர்வு எழுதிய மாணவியின் பெற்றோர் போலீசாலில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில் பாதுகாப்பு தேர்வுவின் பொழுது  பல்வேறு மாணவர்களை உள்ளாடையை அகற்றக்கோரி தேர்வு அலுவலர்கள் வற்புறுத்தியதாகவும் அதனால் தன் மகள் உட்பட அனைத்து மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என  அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும் உள்ளாடையில் மெட்டல் ஹாக் பொருத்தப்பட்டு இருந்தால் தேர்வு அலுவலர்கள் மாணவிகளின் மேல் உள்ளாடைகளை அகற்ற அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் ஆனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇயக்குனர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதி!
Next articleநீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..