சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

0
170
The fake preacher who cheated the girls!! Police surrounded!!
The fake preacher who cheated the girls!! Police surrounded!!

சிறுமிகளை ஏமாற்றிய போலி சாமியார்!! சுற்றி வளைத்த போலீசார்!!

நாம் எவ்வளவோ, படித்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தாலும், இன்னும் சில மக்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் போலி சாமியார்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூரில், நாகேஸ்வரராவ் என்கிற போலிசாமியார் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு சிறுமிகளை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது. சிறுமிகளின் உடன் படிக்கும் மாணவர்கள் மூலம் அவர்களை இதில் சிக்கவைத்து உள்ளார்கள். சிறுமிகளிடம் ஒரு மணி நேர பூஜையில் கலந்து கொண்டால் 1 லட்சம் தருவதாக கூறி, ஏமாற்றி, மே 8ம் தேதி குண்டூருக்கு அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்தனர்.

மறுநாள் குண்டூரில், பொன்னேகல்லு  கிராமத்தில் உள்ள சாமியார் நாகேஸ்வரராவ் வீட்டிற்கு அழைத்து வந்து  இரவு 11 மணிக்கு இரண்டு சிறுமிகளையும் வைத்து நிர்வாண பூஜை செய்துள்ளனர். அதன் பிறகு மே 10 ம் தேதி இரண்டு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு சிலக்கலூரிபேட்டையில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டிலும் இதே போன்று நிர்வாண பூஜை செய்ததாகவும், அங்கு அந்த போலி சாமியார் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.

சிறுமிகள் எதிர்த்து பேசியபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பிறகு அவர்களை பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமிகள்,  பிறகு மீண்டும் பொன்னேகல்லுக்கு கூட்டி போகும் போது, சிறுமி ஒருவர் “திஷா” செயலி மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த 10 நிமிடங்களிலேயே நல்லபாடு டிஎஸ்பி எம்.டி. மகபூப் பாஷா, சிஐ பி. ஸ்ரீனிவாஸ் ராவ் ஆகியோரின் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமிகளை மீட்டனர்.

இந்த சம்பவத்தில் போலி சாமியார் நாகேஸ்வரராவ் மற்றும் அவரது ஆட்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரின் மீதும், கடத்தல், பலாத்கார முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
CineDesk