வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்!! மனம் திறக்கும் முரசொலி மாறன்!!

Photo of author

By Gayathri

முரசொலி பத்திரிக்கையானது தொடர்ந்து நஷ்டத்தில் சென்ற நிலையில், மொத்த சொத்தையும் இழந்து தங்கி இருந்த வீட்டையும் கடனில் விட்டு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்ள இருந்த நிலையில் எம்ஜிஆர் அவர்களே எங்களை காப்பாற்றினார் என்று முரசொலி மாறன் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

அதாவது, முரசொலி பத்திரிக்கை மட்டும் நஷ்டத்தில் செல்லாமல் அப்பொழுது இவரின் குடும்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களும் தோல்வி அடைந்துள்ளன. இதனால் தங்களுடைய சொத்துக்களை இழந்து தங்கி இருந்த வீட்டினையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்த பொழுது, தங்களுடைய நிலை குறித்து எம் ஜி ராமச்சந்திரனிடம் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

புரட்சி நடிகர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்து எங்கள் தங்கம் என்ற திரைப்படத்தினை பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததுடன் மட்டுமின்றி அப்படத்தினை மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் மாற்றி தந்ததாக முரசொலி மாறன் அவர்கள் தெரிவித்திருந்திருக்கிறார்.

இதன் மூலம் தான் தங்களுடைய சொத்துக்களை மீட்டு எங்களுடைய மானத்தையும் மீட்டு நாங்கள் தற்பொழுது சமுதாயத்தில் நன்மதிப்போடு வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கலைஞர் கருணாநிதி அவர்கள் கூறியதாவது :-

மாறன் பேசும் பொழுது புரட்சி கவிஞர் மாறன் பேசும் பொழுது புரட்சி தலைவர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் செய்த உதவி குறித்து பேசி இருக்கிறார். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கர்ணனுடைய கரம் என்று கூறுவார்கள். ஆனால் எங்களுடைய புரட்சித் தலைவருக்கு கொடுத்து உடல் முழுவதும் சிவந்து போய் உள்ளது என்று புகழாரம் சூட்டியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

மேலும் அவர் நன்றி மறப்பது நன்றன்று என்று கூறி முரசொலி மாறன் அவர்களுக்கு புரட்சித் தலைவர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்ததை நானும் வழிமொழிகிறேன் என தெரிவித்துள்ளார்.