பிரபல நடிகர் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்!!

0
111
The famous actor has announced his retirement from the film industry!!
The famous actor has announced his retirement from the film industry!!

விக்ராந்த் மாஸ்ஸி அவர்கள் கோவாவில் நடைபெற்ற 55-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில்  பிரபல இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸிக்கு வழங்கப்பட்டது. இந்திய சினிமாவில் அளப்பரிய பங்காற்றியதை அங்கீகரிக்கும் வகையில் கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சவந்த் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ முன்னிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற்றுக் கொண்ட பின் பேசிய திரைப்பட நடிகர் விக்ராந்த் மாஸி, தனது திரைப்பட வாழ்க்கை பயணம் குறித்து உருக்கமாக எடுத்துரைத்தார். இந்த தருணம் தமக்கு சிறப்பு வாய்ந்த தருணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விருதுக்கு தான் தேர்ந்தெடுக்கப்படுவோம் என தான் எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார். வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ள போதிலும், நாம் எப்போதும் மீண்டும் பயணத்தை தொடங்க தயாராக இருக்க வேண்டுமென்றும், அத்தகைய குணநலன் தமக்கு ‘12th Fail’ என்ற திரைப்படத்தின் மூலம் பெற்றதாக கூறினார்.

ஒருவரது கனவுகள் பல்வேறு இடர்பாடுகளை கடந்து உச்ச நிலையை அடைந்ததற்கான சான்றாக திரைப்பட நடிகர் விக்ரம் மாஸியின் வாழ்க்கை பயணம் அமைந்துள்ளது. அதன்பின்னர், ‘ஜின்னி வெட்ஸ் சன்னி’, ‘ஹசீன் தில்ருபா’, ‘லவ் ஹாஸ்டல்’, 12-த் பெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் ‘கடந்த சில வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தன. அதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகள்.

ஒரு அப்பாவாக, மகனாக மற்றும் ஒரு நடிகனாக வீட்டிற்கு திரும் பும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 2025-ம் ஆண்டு, நாம் ஒருவரையொருவர் கடைசியாக சந்திப்போம். மீண்டும் நன்றி’ இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த செய்யலை கண்டு அவர் ரசிகர்கள் அதிர்ச்சி

Previous articleரஜினி காந்திடமே நான் தான் சூப்பர் ஸ்டார் என பந்தா காட்டிய நடிகை!! கொட்டத்தை அடக்கிய இயக்குனர்!!
Next articleவங்கதேசத்தில் கொழுந்துவிட்டு  எரியும் வன்முறை!! பெண்கள் மீது அத்துமீறும் போராட்ட கும்பல்கள்!!