அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்..!!

Photo of author

By Vijay

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்..!!

Vijay

Updated on:

The famous actress who got on the stage not happily..

அதுமட்டும் நடக்கவில்லை என்றால் என்னை கல்லால் அடிங்க – தமிழிசை செளந்தரராஜன்…!!!

கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதை கொஞ்சம் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த சமயத்தில் மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் அவர்களின் வாக்குறுதிகளை வாய்க்கு வந்தபடி அள்ளி விடுவார்கள். 

ஆனால் ஒருவேளை அவர்கள் ஜெயித்து விட்டால் இந்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.அவர்கள் சொன்னதில் ஒன்றை கூட நிறைவேற்றியிருக்க மாட்டார்கள்.மீண்டும் அடுத்த முறை தேர்தல் சமயத்தில் இதே வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிப்பார்கள்.இது வழக்கமான ஒன்று தான். 

இப்படி உள்ள சூழலில் நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னை கல்லால் அடிக்கலாம் என வேட்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.அந்த வேட்பாளர் வேறு யாருமல்ல பிரபலமான தமிழிசை செளந்தரராஜன் தான்.ஆளுநராக இருந்த தமிழிசை தற்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிட்டு வருகிறார். 

இந்நிலையில்,சோழிங்கநல்லூர் பகுதியில் பெண்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன்,“நான் வெறும் ஓட்டை மட்டும் கேட்டு விட்டு செல்லக்கூடிய ஆள் கிடையாது. உங்கள் சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்று நினைக்கும் ஆள். எனவே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.ஒருவேளை நான் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்றால் என்னை கேள்வி கேளுங்கள்.அவ்வளவு ஏன் கல்லால் கூட அடிங்க”என்று கூறியுள்ளார்.