தனது போட்டோவை தானே புகழ்ந்துக் கொண்ட பிரபல நடிகை! ஹார்ட்டின்களை பறக்கவிட்ட ரசிகர்கள் !!
பிரபல நடிகையான தமன்னா தனது போட்டோவை தானே ஓவியம் என புகழ்ந்துள்ளார்.
தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தமனா. அந்த படத்தில் வில்லி ரோலை ஏற்று நடித்திருப்பார். ஆனால் அதற்கு பின்னால் வந்த கல்லூரி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அடுத்து சூர்யாவுடன் நடித்த அயன் படம் அவருக்கு கை கொடுக்கவே அடுத்தடுத்து பல வேற்றி படங்களில் நடித்தார்.
கார்த்தியுடன் பையா, சிறுத்தை, விஜய் உடன் சுறா, அஜித் உடன் வீரம் தனுஷ் உடன் படிக்காதவன் வேங்கை போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடித்த பிரபாஸ் உடன் நடித்த பாகுபலி அவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
அடுத்ததாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல்வேறு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளார். தற்போது இவரின் நடிப்பில் ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரீஸ் 2, போலா சங்கர் ஆகியன வெளிவர இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம்- ல் வெளியிட்ட புகைப்படங்கள் 3 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகளை பெற்றது. அந்த பதிவில் அவர் என்னை வெறுப்பவர்கள் வேண்டுமானால் இதை ஓவியம் அல்ல என்பர். என்ன ஜாலியாக அவரையே ஓவியம் என பதிவிட்டுள்ளார்.
உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகை தமன்னாவின் அழகினை ரசிகர்கள் பலரும் புகழ்ந்து வருவதோடு மட்டுமில்லாமல் ஏராளமான ஹார்ட்டின்களை அள்ளி பறக்க விடுகின்றனர்.