இளைய தளபதியுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட பிரபல இயக்குனர்!

Photo of author

By Parthipan K

இளைய தளபதியுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட பிரபல இயக்குனர்!

Parthipan K

Updated on:

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, வசூலில் சாதனை படைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த மாஸ்டர் திரைப்படமும் தளபதிக்கு நல்ல பாராட்டுக்களையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சரித்திரம் படைக்கும் என நம்பப்படுகிறது.  ஒரு பிரபல இயக்குனர் தளபதி விஜயுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பினை இரண்டு முறை தவற விட்டு விட்டேன் என்று கூறிவருகிறார்.

அந்த இயக்குனர் K.S.ரவிக்குமார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.  அதாவது இயக்குனர் K.S.ரவிக்குமார், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும்  கமல்ஹாசனுக்கு நிறைய வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் K.S.ரவிக்குமார் சில தவிர்க்க முடியாத காரணங்களினால்  இளைய தளபதியுடன் இணையும் வாய்ப்பை தவற விட்டிருக்கிறார். மேலும் இயக்குனர் K.S.ரவிக்குமார் நடிகர் விஜயுடன் படம் இயக்க இனி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விட மாட்டேன் என்றும் கூறி வருகிறாராம்