பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்!

Parthipan K

The famous singer died suddenly! Sad fans!

பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு! சோகத்தில் வாடும் ரசிகர்கள்!

தென் கொரியா தலைநகரான சியோலில் ஹாலோவீன் விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்த விழாவிற்கு என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் திடீரென அந்த பகுதிக்கு அதிக அளவு கூட்டம்  வந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அந்த கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி பலர் மயங்கி விழுந்தனர்.அந்த கூட்ட நெரிசலில் 300 க்கும் மேற்பட்டோர் சிக்கி பாதிக்கப்பட்டனர். மேலும்  சம்பவ இடத்திலேயே பல பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்பதற்காக 300-க்கும் மேற்பட்ட வீரர்களை கொண்ட மீட்பு பணி நடைபெற்று வந்தது ஆனால் அங்கு உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.

மேலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 149 உயிரிழந்திருப்பதாகவும் 160க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரிய பாப் சிங்கரான லீ ஜிகான் என்பவர் உயிரிழந்துள்ளார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இவருக்கு தற்போது 24வயதே ஆகும் நிலையில் இளம் பாப் சிங்காரகவும் ,நடிகராகவும் இருந்து வந்தார்.புரோடியூஸ் 101என்ற பாட்டுப்போட்டிக்கான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று அவருடைய திறமையை வெளிப்படுத்தி அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே சேர்தவர்.

மேலும் இவர் ஆல்பம் ,நடிப்பு என எப்பொழுதும் பிசியாகவே இருப்பார்.இதனையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஹாலோவீன் விழாவில் கலந்து கொண்டார்.இந்நிலையில் இவருடைய இறப்பிற்கு ரசிகர்கள் ,பிரபலங்கள் ,பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.