பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!

Photo of author

By Rupa

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.ஆனால் அந்த மதுவிற்கு அடிமையானவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த மதுவால் பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது.தற்போதுவரை பல குடும்பங்கள் வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த மது தான்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி தான் வருகின்றனர்.

ஆனால் அதனை வாங்குவதற்கான நேரத்தை குறைக்கிறதே தவிர பூரண மதுவிலக்கு அமல்படுத்துவதாக தெரியவில்லை.தற்போது இந்த மதுவால் பெற்ற மகனை கொல்லும் நிலை வந்துவிட்டது.கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்து ஓர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் பரமசிவம் மற்றும் அவரது மனைவி மாலா.இவர்களுக்கு சிவகுமார் மற்றும் சிவா என இரு மகன்கள் உள்ளனர்.இதில் சிவகுமார் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.இரண்டாவது மகன் சிவா சென்னையில் ஓர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.இவரது முதல் மகன் அன்றாடம் வேலை செய்யும் ஊதியத்தை வீட்டிற்கு தராமல் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வேலைக்கு செல்லாத தினங்களில் மனைவி,அம்மா மற்றும் அவரது அப்பா என மற்றவரிடம் தகராறு செய்து பணம் வாங்கிக்கொண்டு குடிப்பது இவரது வழக்கம்.அவ்வாறு தன தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.அவர் தர மறுத்துள்ளார்.பிறகு இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.கோவம் பொறுக்க முடியாத இவரது தந்தை கீழே கடந்த கல்லை கொண்டு அவரது மகனின் தலையில் அடித்துள்ளார்.தந்தை அடித்ததில் சிவகுமார் அவ்விடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.பிறகு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.அதற்கடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.மேலும் அவரது தந்தை பரமசிவம் மீது வழக்கு பதிவி கைது செய்தனர்.