மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை “சனியன் “”லூசு” என திட்டிய அரசு பெண் ஊழியர்!

0
121

மாஸ்க் போடவில்லை என வண்டியை நிறுத்திய போலீசை , மாஸ்க் போடலன்னா வண்டிய நிறுத்திவீங்கள? என காரைக்காலில் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு பெண் ஊழியர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீஸார், ஸ்கூட்டியில் ஒரு பெண் வந்து கொண்டிருந்தபோது அவர் மாஸ்க் அணிய வில்லை என நிறுத்தி ஃபைன் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண் பைன் எல்லாம் கட்ட முடியாது, வேற வேலை இல்லையா எனக்கு, நாங்க மாஸ்க் போடலனா நாங்கதான் சாவோம், நீங்க ஏன் வண்டியை நிறுத்தி வைக்கிறீங்க, என்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

போலீசார் மரியாதையுடன் பேசியும் அந்தப் பெண் பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

போலீசார் மற்றும் பெண் அரசு ஊழியர் இடையே ஆன வாக்குவாதத்தில் “அந்தப் பெண் அரசு ஊழியரை போலீசார் நிறுத்தி மாஸ்க் ஏன் போடவில்லை என்று கேட்டதற்கு மாஸ்க் பையில் உள்ளது என பெண் ஊழியர் சொல்லியுள்ளார். பையில் வைத்துக்கொண்டு எதற்கு வந்தீர்கள் என்று கேட்டதற்கு, வண்டியை ஓரமாக நிறுத்தி பைன் கட்டுங்கள் என்று சொன்னதற்கு, ஃபைன் கட்ட முடியாது, வேற வேலை இல்லையா எனக்கு, என்று சொல்லியுள்ளார். அதற்கு போலீஸ் எங்களுக்கு கால்கடுக்க நிற்கும் எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று அவர்கள் கேட்டுள்ளனர். அபராதம் கட்டுங்கள் என்று சொன்னதற்கு, இங்கே என்ன கொட்டிக் கிடக்கிறதா என்று அந்தப் பெண் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாஸ்க் அணியாதது உங்களுடைய தவறு என்று போலீசார் சொல்லியும், அந்தப் பெண் என்னால் ஃபைன் கட்ட முடியாது என்று மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்தவர்களை பார்த்து இதற்கு வீடியோ எடுக்கிறீர்கள் என்று அவர்களையும் அவதூறாக பேசியுள்ளார்.

மேலும் வீடியோ எடுத்தவரை லூசு சனியன் என்று திட்டி உள்ளார். மீண்டும் வாக்குவாதம் தொடர்ந்துள்ளது. எதற்கு அந்த ஆள் வீடியோ எடுக்கிறான் மாஸ்க்கு போடலைன்னா வண்டி நிறுத்திவீன்ங்களா, அபராதம் எல்லாம் கட்ட முடியாது. கலெக்டர் அட்ரஸ் கொடுங்க கலெக்டரிடம் போய் கேட்கிறேன் என்றெல்லாம் வாதாடியுள்ளார்.

நீங்கள் அபராதத்தை எடுத்துக்கொண்டு சாப்பிட்டு விடுவீர்கள். மாஸ்க் போட வில்லை என்றால் நாங்கள் தான் சாவோம் உங்களுக்கு என்ன வந்தது நீங்கள் ஏன் அபராதத்தை வாங்கி இருக்கிறீர்கள். நாங்கள் என்ன மெஷின் வைத்து அச்சு அடிக்கிறோமா என்றெல்லாம் அந்த பெண் கேட்டுள்ளார்.

இதைப் பார்த்த மக்கள் பணி புரியும் காவலர் இடத்தில் முறையற்ற பெண்ணின் இந்த விவாதம் தேவையற்றது. தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் அரசு வேலை செய்யும் திமிரு. சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று திட்டி உள்ளனர்.

Previous articleநீண்ட நாளுக்குப்பின் கோவிலுக்கு படை எடுக்கும் பக்தர்கள்!
Next articleகாதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்!