சிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்!

சிங்கப்பெண்ணே என்னும் பாடலுக்கினங்க பெண் போலீஸ் ஐபிஎஸ்!

பெண்கள் பல துறைகளில் சாதித்து வரும் நிலையில் பிகில் பட பாணியில் நிஜ சிங்கப்பெண்ணாக வளம் வரும் பெண் கமிஷ்னர்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கமிஷ்னருக்கு 14 வயது கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.அந்த போலீஸ் கமிஷனர் தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தியதை பார்த்து போலீஸ் கமிஷ்னரின் மனைவி மிகவும் வியப்படைந்துள்ளர்.

தனது கணவரிடம் அதைப் பற்றி கேட்ட போது உயர் அதிகாரிகளுக்கு இவ்வாறு தான் மரியாதை செலுத்துவார்கள் என கூறியுள்ளார்.அப்போதிலிருந்தே கமிஷ்னரின் மனைவி மனதில் தானும் கமிஷ்னர் ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.10 ஆம் வகுப்பு கூட முடிக்காத நாம் எப்படி கமிஷ்னர் ஆக முடியும் என பல குழப்பங்கள் அவர் மனதில் எழுந்துள்ளது.குழப்பத்துடன் இருந்த போலீஸ் கமிஷ்னர் மனைவி தன் கணவரிடம் தானும் காவல் அதிகாரியாக ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.அதன்பின் தனது மனைவி படிப்தற்கு பல ஏற்பாடுகளை செய்து கொடுத்து10 மற்றும் 12 வகுப்பு முடிப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இதற்கடுத்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.அவர்களையும் பார்த்துக்கொண்டு தனது படிப்பிலும் கவனம் சிதறாமல் படித்து வந்தார்.அதன்பின் காவலர் பணிக்கான தேர்வை எழுதுவதற்காக சென்னை சென்றுள்ளார்.இருமுறை தேர்வு எழுதியும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.இதனைத்தொடர்ந்து அவரது கணவர் மற்றொரு முறை தேர்ச்சி எழுத ஊக்குவித்திருக்கிறார்.அவரது தன்னம்பிக்கையை பெற்ற அவரது மனைவி மூன்றாவது முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மும்பை காவல் நிலையத்தில் ஐபிஎஸ் ஆக பணியாற்றி வருகிறார்.

இவரது வாழ்க்கையானது மற்ற பெண்களுக்கும் அவர்களது கணவர்களுக்கு ரோல் மாடலாக அமைந்துள்ளது.

Leave a Comment