அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!

Photo of author

By Parthipan K

அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா! பக்தர்கள் இந்த பொருட்களை எடுத்து வர அனுமதி கிடையாது!

இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பகுதி கச்சத்தீவு. ராமேஸ்வரம் தீவிலிருந்து சுமார் 12 கடல் மயில் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல்  மயில் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலில் இந்தியா மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் திருவிழா நடத்தி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து சுமார் 2408 பேர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு மத்திய அரசு சார்பில் 4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர், மருத்துவ உதவி, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கச்சத்தீவு வருவோர் மதுபானங்களை எடுத்து வரவும், மது அருந்திவிட்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு புகை பிடிக்கவோ, பிளாஸ்டிக் போன்ற பாலித்தீன்  பைகளை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.