கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ள FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2022
2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த வருடம் கத்தாரில் நடைபெறஉள்ளது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் FIFA உலக கோப்பை நடைபெறுவது இதுவே முதல்முறை.
இப்போட்டி நவம்பர் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க கடந்த சில வருடங்களாக 200 க்கும் மேற்ப்பட்ட அணிகள் போட்டி போட்டு கொண்டு இருந்தாலும் போட்டி நடத்தும் கத்தாரையும் சேர்த்து மொத்தம் 32 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன.
32 அணிகளும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டி 28 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். இதன் இறுதி போட்டி டிசம்பர் 18 அன்று நடைபெறும்.
மேலும் கத்தாரில் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 15 லட்சம் ரசிகர்கள் நேரில் பார்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டில், கத்தார் ஒரு கப்பல் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் மிதக்கும் ஹோட்டல்கள் ஒன்றை தயார் செய்து உள்ளது.
இதற்காக மொத்தம் 8 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை ஒன்றிற்கொன்று 43 மைல் தொலைவில் உள்ளன. FIFA உலக கோப்பை வழக்கமாக ஜூன் ஜூலை மாதங்களில் நடத்தப்படும். ஆனால் அச்சமயத்தில் கத்தாரில் கடுமையான வெயில் நிலவும் என்பதால், இந்த முறை நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.