பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..?? 

0
325
The film hero Darshan secretly married the famous Malayalam actress..??
The film hero Darshan secretly married the famous Malayalam actress..??

பிரபல மலையாள நடிகையை ரகசிய திருமணம் செய்த கனா பட ஹீரோ தர்ஷன்..?? 

கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் நடிகர் தர்ஷன். அந்த படத்தை தொடர்ந்து தும்பா, வலிமை போன்ற ஒரு சில படங்களில் தர்ஷன் நடித்துள்ளார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிவரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் நேரம், இக்லூ போன்ற சில படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை அஞ்சு குரியனும் நடிகர் தர்ஷனும் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதனை கண்ட பலரும் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவில்லையாம். இது ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி தர்ஷன் மற்றும் அஞ்சு குரியன் இணைந்து லலிதா ஜூவல்லரி நகைக்கடை விளம்பரத்தில் நடித்துளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தானாம் இவை.

ஆனால் இது தெரியாமல் பலரும் இவர்கள் இருவரும் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டதாக கூறி இந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறார்கள். நடிகை அஞ்சு குரியன் இறுதியாக தமிழில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்திருந்தார். இதுதவிர மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!
Next articleகற்பூரத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!