தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

Photo of author

By Parthipan K

கொரோனா தாக்கம் காரணமாக  இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்கும் தமிழ்நாட்டில் திறக்கப்படாது  என கூறிகின்றனர். இந்நிலையில் திரையரங்குக்கு இல்லாமல், OTTயும் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் 2 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால், சுந்தர்.சி தயாரிப்பில் பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் மலையாள படத்தின் ரீமேக்கான மாயாபஜார் படமும், கொம்பன் மருது போன்ற படங்களை இயக்க முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த இரு படங்களும் பிரபல முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் வெளியாகவுள்ளது என தெரிவிக்கின்றனர். இதனால் சன் டிவியின் TRP இன்னும் அசுர வளர்ச்சியை எட்டும் என்று கூறப்படுகிறது.