இறுதி பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் !!  

0
119

தமிழகத்தில் கல்லூரிகளுக்கான இறுதி பருவத் தேர்வுகளை இணைய வழியாக நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் கூறியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனைத்து பருவ தேர்வுகளையும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் அறிக்கை வெளியானது. ஆனால் இறுதி பருவ தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது. இந்தியா முழுவதும் கல்லூரி இறுதி தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும், மாணவர்கள் நேரில் வந்து எழுதவேண்டும் என்றும் உயர்க் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்து தேர்வு எழுதுவது பாதுகாப்பற்றது என பேச்சு எழுந்தது. இதுபற்றி விளக்கம் அளித்த அமைச்சர், “பல்கலைக்கழக கல்லூரி ,இறுதிப்பருவத் தேர்வுகள் இணையவழி மூலமும் நடத்தப்படும் என்று கூறினார். தேர்வினை இணையவழியில் தேர்வு எழுதுவதோ அல்லது நேரில் வந்து எழுதுவதோ என்பதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளே முடிவு செய்துகொள்ளலாம்” என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Previous articleசூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் ரிலீசில் சிக்கல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleஉலகிலேயே 40 வயதுக்குட்பட்ட பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் விபரம்!