எலான் மஸ்க் கிற்கு விழுந்த முதல் அடி!! காரணம் டிரம்ப் தான்  வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Vijay

எலான் மஸ்க் கிற்கு விழுந்த முதல் அடி!! காரணம் டிரம்ப் தான்  வெளியான அதிர்ச்சி தகவல்!!

Vijay

the-first-blow-to-elon-musk

USA: டிரம்ப் வெற்றிக்கு காரணமாக இருந்த பணக்காரரான எலான் மாஸ்க் தேர்தலுக்கு பின் முதல் அடியை வாங்கியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து உறுதுணையாக இருந்து எலான் மஸ்க் க்கு முதல் அடி விழுந்துள்ளது இதற்கு காரணம் டிரம்ப் தான் என கூறப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் உலக நம்பர் 1 பணக்காரர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என பன்முகம் கொண்ட எலான் மஸ்க்.

இவர் தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்காளர்களுக்கு பரிசு போன்ற பல்வேறு வகையில் டிரம்ப் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எலான் மாஸ்க். இந்த தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் எலான் மஸ்க்கை தன்னுடைய அமைச்சரவை ஆலோசகராக ஆக்கும் எண்ணம் எனக்கு உள்ளது என்று அவர் கூரி இருந்தார். மேலும் இவர் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக x வலைதளத்தை அதாவது இதற்கு முன் ட்விட்டர் என அழைக்கப்பட்ட x வலைதளத்தை பயன்படுத்தி அதில் பிரசாரம் செய்யும் புகைப்படங்களை பதிவிட்டார்.

இந்நிலையில் எலான் மாஸ்க் பெரிய அடி வாங்கியுள்ளார். தேர்தல் நேரத்தில் வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்ததன் காரணமாக தேர்தலுக்கு பின் x வலைத்தளத்தில் இருந்து தேர்தலுக்கு பின் 1.50 லட்சம் பயனர்களுக்கும் மேலாக இந்த தளத்தில் இருந்து விலகியுள்ளனர். இதனால் எலான் மஸ்க்கிற்கு பெரிய அடியாக பார்க்கபடுகிறது.