இந்தியாவில் முதன் முதலில் மொபைலில் பேசியவர்!! ஒரு நிமிட கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்ட தகவல்!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் 29 ஆண்டுகளுக்கு முன் அதாவது ஜூலை 31, 1995 இல் முதன் முதலில் அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு மற்றும் மத்திய தகவல் துறை அமைச்சர் சுக் ராம் இடையே நடந்தது.நோக்கியா கைபேசியைப் பயன்படுத்தி செய்யப்பட்ட முதல் அழைப்பு: தகவல் தொடர்புகளில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது.

அந்த சகாப்தமே இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் ஃபோன்களாகவும் டிஜிட்டல் போன்களாகவும் உலகமே கையில் என்ற கோட்பாட்டின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் அக்காலத்தில், இந்தியாவின் பிகே மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ரா நிறுவனங்களின் கூட்டு முயற்சியான மோடி டெல்ஸ்ட்ரா நெட்வொர்க் இந்த வரலாற்று அழைப்பின் பின்னணியில் செயல்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.

மேலும் இந்த தொடர்பு முதன்முதலில், கொல்கத்தா மற்றும் புது டெல்லி ஆகிய இரு நகரங்களுக்கிடையேயும் இந்த தொடர்பு ஏற்பட்டது.எந்த ஒரு பொருளும் முதலில் வரும்போது விலை அதிகமாக இருக்கும். முதல் நோக்கியா ஃபீச்சர் போன்களின் விலை 40,000 ரூபாய்க்கு மேல், இது இன்றைய மதிப்பில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாகும். அந்த நேரத்தில் வெளியான போன்களில் நோக்கிய 2080 நோக்கிய 350 மற்றும் நோக்கிய 880 ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அந்த காலகட்டத்தில் மொபைல் தொடர்பு ஒரு ஆடம்பரமாக கருதப்பட்டது. ஒரு அழைப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் நிமிடத்திற்கு ரூ.8.4 ஆகும். உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இரண்டிற்கும் கட்டணங்கள் பொருந்தும். மேலும், பீக் ஹவர்ஸின் போது அழைப்புக் கட்டணம் நிமிடத்திற்கு ரூ.16.8 ஆக உயர்ந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே மொபைல் போன்கள் கிடைத்தாலும், பணம் இருந்தும் மொபைல் போன் வாங்க முடியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்பொழுதோ சிறு குழந்தைகளின் கையில் கூட மொபைல் போன் விளையாடும் அளவு டெக்னாலஜி வளர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும்.