மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

0
145
#image_title

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் சிறிய மீன்களின் விலை குறைந்த நிலையிலும் விற்பனை.

தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15முதல் ஜீன் 14 வரை தடைகாலமானது கடைபிடிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது.

இந்நிலையில் நேற்று இந்த தடைகாலமானது தொடங்கிய நிலையில்
இன்று ஏற்கனவே கடலுக்கு மின்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரைக்கு திரும்பின.

முன்னராகவே பல விசைபடகுகள் கரை திரும்பிய நிலையில் நேற்று கரைக்கு திரும்பிய கிட்ட தட்ட 50க்கும்மேற்பட்ட விசைப்படகுகள் மீன்விற்பனையில் ஈடுபட்டன.

நள்ளிரவு இரண்டு மணி அளவில் ஏல முறையில் தொடங்கிய இந்த விற்பனையில் சென்னையின் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு சந்தை பகுதிகளில் கடை வைத்திருக்க கூடிய பெருவியாபாரிகள் மற்றுழ் சிறு வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மீன்களின் விலையை பொறுத்த மட்டில் வஞ்சிரம் வவ்வா கொடுவா நாயாறல்
பெரிய வகை சங்கரா கடமான் நண்டு இறால் போன்ற மீன்களின் விலை அதிகரித்தும்.

கானாங்கத்தை முளியான் பாறை கவலை போன்ற சிறியவகை மீன்கள் விலை குறைந்தும் காணப்பட்டது.

அடுத்த வரக்கூடிய 61 நாட்கள் தடைகாலம் என்பதால் பொதுமக்கள் வியாபாரிகள் என பலரும் கூட்டமாக காசிமேடு மீன் விற்பனை ஏலக்கூட பகுதிக்கு ஆர்வமுடன் வந்ததை காணமுடிந்தது

வஞ்சிரம் 1300 – 1500

கொடுவா 800 – 1000

இறால் 600- 800

பாறை 400- 600

சங்கரா 300 – 500

கடம்பா – 600

நண்டு 500

Previous articleமெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!
Next articleஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து! மூன்று பேர் எரிந்து பலி!!