முதல்வரை ரகசியமாக சந்தித்த பெண் எம்.எல்.ஏ! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இந்நிலையில் தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதனையடுத்து அதிமுக வினர் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.மொத்தமாக 117 வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளது.தேர்வு செய்யப்படாத வேட்பாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த வித போராட்டங்களையும் நடத்தவில்லை.அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.அப்போது திருச்சி மனச்சநல்லூர் பகுதியின் பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் விருப்பமனு அளித்தார்.ஆனால் இவருக்கு வாய்ப்பு வழங்காமல் அதே பகுதியை சேர்ந்த பரஞ்சோதிக்கு என்பவருக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளனர்.
இதனைக்குறித்து முதலமைச்சர் வருவதை தெரிந்த பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் அவரைக் காண முதல் ஆளாக சென்று காத்திருந்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் இருந்து இறங்கியதும் அவரிடம் நேரே சென்று தனக்கு வாய்ப்பு வழங்காததை பற்றி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.நான் அதிக அளவு கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்துள்ளேன்.ஆனால் என்னை சிட்டிங் எம்.எல்.ஏ என என்னை புறகனித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு ஆறுதல் கூறினார்.அதன்பின் எடப்பாடி பழனிசாமி உங்களுக்கான வாய்ப்பு தக்க சமயத்தில் வழங்கப்படும் கவலைக்கொள்ள வேண்டாம் எனக் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதும் மனம் மாறிய பெண் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகேசன் உங்கள் முடிவுக்கு நான் சம்மதம் தெரிவிக்கிறேன்.உங்கள் முடிவை எதிர்த்து ஒரு நாளும் போராட மாட்டேன்.எப்போதும் கட்சிக்காக உண்மையுடன் போராடுவேன்.நீங்கள் எனக்கு சீட் தந்தாலும் தராவிட்டாலும் முதல்வர் உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன் எனக் கூறினார்.தேர்தல் பணிகளை எப்போதும் போல தீவிரமாக செய்வேன் என இவ்வாறு கூறினார்.இவர் இவ்வாறு திடீரென்று முதல்வரை சந்தித்து தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.