12 நாளில் எடுக்கப்பட்ட எம்ஜிஆரும் ஜெமினியும் இணைந்து நடித்த ஒரே படம்!

ஜெமினிகணேசனும் சிவாஜி கணேசனும் இணைந்த பல்வேறு படங்களை நடித்துள்ளனர். ஆனால் எம்ஜிஆர் ஜெமினியும் இணைந்து ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்து உள்ளனர். அந்தப் படமும் அவ்வளவு ஓடவில்லை என்று சொல்லப்பட்டது.

 

“முகராசி “1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

 

இந்த படம் 12 நாட்களில் எடுக்கப்பட்ட படமாகும்.

 

இதில் ஜெமினி கணேசன் அண்ணனாகவும் எம்ஜிஆர் தம்பியாகவும் நடித்திருப்பார்கள். தன் அன்னையை ஒருவன் கொலை செய்து விடுகிறான். அதை அண்ணனாகிய ஜெமினிகணேசன் பார்த்து விடுகிறார். அவனைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே வளர்கிறார் அண்ணன். ஆனால் தம்பி ராமு போலீஸ் அதிகாரி ஆகிவிடுகிறான். குற்றம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிற்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறான் ராமு.

 

தம்பி ராமு அந்த ஊரின் பணக்காரரான ஜெயலலிதாவை காதல் செய்கிறார். இறுதியில் தான் தெரிய வருகிறது அந்த கொலைகாரனின் மகள் தான் ஜெயலலிதா என்று . கடைசியில் குற்றவாளியை என்ன செய்கிறார்கள் என்பது தான் கதை.

 

இந்தப் படத்தின் போது எம்ஜிஆரின் அன்பே வா படமும் வெளியானது. இந்தப் படத்திற்கு அதிகமான வரவேற்புகள் கிடைக்கவில்லை. பாடல்களும் சரியாக ஓடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.