இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!

Photo of author

By Parthipan K

இந்தியாவில் கொரோனாவின் நான்காவது அலை! ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு!!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் அதி வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் அதன்பின் உலக நாடுகள் முழுவதும் பரவி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தியாவிலும் நுழைந்தது. அதன்பிறகு நாடு முழுவதும் இதன் பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே சென்றது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாட்டையே புரட்டி போட்டது. பின்னர், அரசின் தீவிர கட்டுபாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில், கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவியது.

கொரோனாவை காட்டிலும், இந்த டெல்டா வகை கொரோனாவின் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தது. இதன்மூலம் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதபடுத்தப்பட்டது. அதன்பின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் காணப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது.

அதன்பின், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, கட்டுக்குள் இருந்த கொரோனாவின் பரவலும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் நாட்டில், கடந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் மூன்றாவது அலை உருவானது.

தற்போது இந்த மூன்றாவது அலை கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் நான்காவது அலை தொடங்க உள்ளதாக உத்தரபிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதுகுறித்து அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,

தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட சில நாடுகளில் நான்காவது அலை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் நான்காவது அலை தொடங்கும் எனவும் இந்த நான்காவது அலையானது இந்தியாவில் நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.