இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) NPCI யு பி ஐ புதிய விதிகளை வகுத்துள்ளது. இன்று (பிப்ரவரி 15) முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறை யூபிஐ டிரான்ஸ்லேஷன் சார்ஜ் பேக்கின் கீழ் அமுல் படுத்தப்படுகின்றது. இதன் மூலம் பரிவர்த்தனையும் போது ஏதேனும் மோசடி ஏற்பட்டாலோ அல்லது தவறி பணம் அனுப்பப்பட்டாலோ, திருடப்பட்டாலோ அந்த பணத்தை திரும்ப பெற இது பெரும் வகையில் உதவும்.
இதற்காக கஸ்டமர்கள் எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்கத் தேவையில்லை. இதனால் ஆங்காங்கே இது குறித்த அமௌன்ட் ரிட்டன் செய்யப்பட்டாலும் அதற்குரிய கம்ப்ளைன்ட் வாபஸ் பெறுவதில்லை. இதனை முடிக்கும் கண்ணோட்டத்தில் இதற்கு என்று தனி டீம் வைத்து வருட இறுதியில் வேலை பார்க்க வேண்டியுள்ளது. இதனை சரி செய்யும் உழைப்பில் இது போன்ற கம்ப்ளைன்ட்டை ஆட்டோமேட்டிக்காக சரி செய்யுமாறு தற்சமயம் வரைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பணம் இழந்த கஸ்டமர் களுக்கு உடனடியாக பணம் ரிட்டர்ன் செய்யப்படும். மேலும் வீண் தகவல் பரிமாற்றமும் ஏற்படாது. இன்றைய நடப்பு காலங்களில் யூ பி ஐ ஆப்ஸ்கள் மூலம் நிறையாக பரிவர்த்தனை செய்யப்படுவதால் இது குறித்த மாற்றங்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. மேலும், சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் வலியுறுத்தலும் வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற முனைப்போடு கொடுப்பனவு கழகம் செயல்பட்டு வருகிறது.