அமேசான் நிறுவனமானது தன்னுடைய நிறுவனத்தில் இருந்து அதிக சம்பளம் பெறக்கூடிய அதாவது 30 ஆயிரம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை சம்பளம் வாங்க கூடியவர்களை குறி வைத்து தற்பொழுது 14,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு வந்த பின்பு பல பெரிய நிறுவனங்களில் ஊழியர்களின் தேவைகள் குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதாவது நிறுவனத்தின் சொந்தக்காரர்களுக்கு ஆட்குறைப்பு செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படுவதால் இதுபோன்ற வேலை நீக்கங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட வேலை நீக்கங்களை நினைத்து பார்க்கும் பொழுது தற்பொழுது படித்துவிட்டு வெளியே வரக்கூடிய மாணவர்களின் எதிர்காலமானது என்னவாகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏ ஐ மற்றும் பல புதிய தொழில்நுட்பங்கள் தொழில் நிறுவனங்களுக்குள் நுழைக்கப்படுவதால் கண்காணிப்பு மேலாண்மை உட்பட பல தேவைகளுக்கு மனிதர்களின் தேவைகள் இல்லாமல் போவதாகவும் இவ்வாறு நடைபெறுவதால் இந்த வேலை நீக்கமானது தொடர்ந்து இன்னும் பல நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் என்ற சூழல் உள்ளதால் எந்த நிறுவனத்தை நம்பி வேலைக்கு செல்ல முடியும் என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது. இனி படித்து முடித்து வேலைக்கு செல்ல நினைக்கும் மாணவர்கள் தங்களுடைய திறமைகளால் சிறு சிறு குழுக்களாக இணைந்து தங்களுக்கான தொழில்களை உருவாக்கிக் கொள்வதே அவர்களுடைய எதிர்காலமாக அமையும் என்பது போல தெரிவிக்கப்படுகிறது