அன்று 2G-ஆல் திமுக ஆட்சி கவிழ்ந்தது! தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி 

0
344
#image_title
அன்று 2G-ஆல் திமுக ஆட்சி கவிழ்ந்தது! தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அதிரடி
முன்னணி கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்போடு கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் நிறுவனம் தென் மாநிலங்களில் கட்டுமானங்களில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் முக்கிய இடங்களில் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டுமே சிஎம்டிஏ சார்பாக வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனை குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த தனது தெரிவித்துள்ளார். அதில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதன் அடிப்படையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்ய வேண்டும். அதனை கைப்பற்றி விட்டால், தமிழகத்தில் சொத்துவரி, பால்விலை, மின்கட்டணம் உள்ளிட்டவையை ஏற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், இன்று வருமான வரித்துறை மூலம், மத்திய அரசு தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளது. ஜி ஸ்கொயரால் திமுக வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அன்று 2ஜியால் திமுக ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் என கூறி  இருந்தார்.
ஜி ஸ்கொயர் நிறுவனமானது சில ஆண்டுகளுக்கு முன்னர் சில லட்சங்களில் ஆரம்பித்து, 20, 30 கோடி என வளர்ந்து தற்போது பல்லாயிரம் கோடி சொத்து வந்துள்ளது. அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், அதனால் தான் தற்போது ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்றும், அந்த சோதனை முடிந்ததும் விவரம் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமோ அல்ல. திமுக ஆட்சி அமைப்பதற்க்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்கள் நிறுவனம் தொழில் செய்து வருகிறது.
ஜி ஸ்கொயர் மற்றும் அதன் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்கள் தவறான மதிப்புகளோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.