தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

0
131
#image_title

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆதரவு

தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 மணி நேர கட்டாயம் வேலை சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் ,தொழிற்சங்கத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் 12 மணி நேரம் கட்டாய வேலை சட்டத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 12 மணி நேர வேலை என்பது தொழிலாளர்கள் விருப்பப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது தான் சட்டம்.

அதிக நேரம் வேலை செய்து விட்டு அதிக நேரம் ஒய்வு எடுத்தால் மனித சக்தி அதிகரிக்கும் என உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆகையால், புதிய சட்டத்தால் பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறதே தவிர பணியின் நேரம் அதிகரிக்கவில்லை 12 மணி நேர வேலை விவகாரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்யக் கூடாது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அவர்களும் இந்த 12 மணி கட்டாய வேலை சட்டத்திற்கு ஆதரவு என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha