டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்!
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பில்லு கடை பஸ் ஸ்டாப்பில் டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் அப்துல் சுகூர் (54) என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். அப்போது அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை டீ மாஸ்டரின் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமுல் கொடுக்குமாறும் தகராறு செய்துள்ளனர்.
அதனால் அவர்கள் இடையே வாக்கு பாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த கும்பல் அப்துல் சுகுரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த பிஸ்கட் ,பலகாரங்கள் வைத்திருந்த ஜாடை கீழே போட்டு உடைத்து கடையையும் சூறையாடியுள்ளனர் மேலும் இது குறித்து அப்துல் சுகூர் அன்னதானப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (22), சதீஷ்குமார் (21), ரஞ்சித் குமார் (25), மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர். இதில் ரஞ்சித் குமார் பிரபல ரவுடி எனவும் தெரியவந்தது. இவர் கிச்சிப்பாளையம் பிரபல ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் கைதானவர் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைதான ஐந்து பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.