மொட்டை மாடியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது நேர்ந்த சோகம்! 15 வயது சிறுமி பலி

0
115

கரூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.பி நகரில் முருகன் உமாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு விஷாலினி என்ற 15 வயது மகள் உள்ளார்.விஷாலினி புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் விஷாலினி வீட்டுக்குள்ளேயே இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் விஷாலினி அதே பகுதியில் உள்ள அபார்ட்மென்டின் 5 ஆவது மாடியில் உள்ள அவளது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் அங்குள்ள மொட்டை மாடிக்கு செல்ஃபி எடுப்பதற்காக சென்றுள்ளார்.செல்ஃபி எடுக்க அங்குள்ள சுவர் ஒன்றில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.இதனை அடுத்து சிறுமியை மீட்டு பெற்றோர்கள் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர்.

ஆனால் அந்த மருத்துவமனையில் விஷாலினியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.இதனை அடுத்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மருத்துவர்கள் விஷாலினியை பரிசோதித்து பார்த்து விட்டு அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.கருர் அருகே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous article14 வயது சிறுமியை முள் காட்டில் உயிரோடு எரித்த பயங்கரம்..? அந்தப் பெண் முள் காட்டிற்கு சென்ற காரணம்?
Next articleகுழந்தையுடன் தாய் பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உள்ள பின்னணி? பிரியங்காவின் கணவர் கைது