அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்!

0
180
The government increased the price of milk in action! Disgruntled people!
The government increased the price of milk in action! Disgruntled people!

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்!

புதுச்சேரி அரசு பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சலுகை விலையிலும் வழங்கப்படுகின்றது.அதனால் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர்  44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.அந்த விலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.ஒரு லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தி 48 ரூபாய் விற்பனை செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் கொள்முதல் விலையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி 34 ரூபாயில் இருந்து 37 ரூபாயாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.கடந்த ஆண்டு முதல் பாண்லே நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் அதனை ஈடு செய்யும் விதமாக பால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleருத்ரதாண்டவம் எடுத்த கொரோனா! பள்ளி மாணவர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
Next articleஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!!