இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!!

0
178

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!!

சீனாவில் தோன்றி வேகம் எடுத்து ஆட்டி படைத்து வரும் பிஎஃப்7 என்ற ஓமிக்ரானின் துணை வைரஸ் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான்,பிரேசில், கொண்ட நாடுகளுக்கும் பரவி விட்ட நிலையில் இந்தியாவிலும் தற்போது அதிகம் பரவுமோ என்ற அச்சம் நிலவியுள்ளது.

கடந்த வாரத்தில் 3 பேருக்கு குஜராத் மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட வைரஸ் நேற்று முன்தினம் பீகாரின் புத்தகயாவில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24ஆம் தேதி முதல் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டாய கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. படி டிசம்பர் 24, 25 மற்றும் 26 தேதிகளில் வந்த 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி 1780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு பி எஃப் 7 வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது மரபணு சோதனை முடிவில் தெரியவரும். அதற்காக அவர்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நேற்று டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் பிரம்மாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்ற நிலையில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனோ இந்தியாவிலும் அதிகரிக்க கூடும் என்பதால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் தயார் நிலையில் இருப்பது மிகவும் அவசியம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.