அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு!  

அரசாங்கம் தான் பொருட்களை சரியாக அனுப்புவதில்லை! ரேஷன் ஊழியரின் தில்லு முல்லு!

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் பகுதியில் கூட்டுறவு சொசைட்டியல் ரேஷன்  கடை செயல்பட்டு வருகிறது இதன் பொருப்பாளராக  ஆசை என்பவர் உள்ளார் . இவர் ரேஷன் கடைக்கு முறையாக வருவதில்லை. பொறுப்பாளர் ஆசை என்பவர் ரேஷன் கடைக்கு வரும் பொழுது மது அருந்தி விட்டு தான் வருவார்  என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அப்பகுதியில் மிகவும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது.

இதனை  பொதுமக்கள் நேரில் சென்று ரேஷன் கடை பொறுப்பாளர் ஆசை  அவரிடம் கேட்டபொழுது சரியாக பொருட்கள் வருவதில்லை வந்தாலும் பாதி தான் வருகிறது என தமிழக அரசை குற்றம் சாட்டி வருகிறார்.பொது மக்களும் ஏமாந்து நிலையில் வீட்டிற்கு சென்று தமிழக அரசை திட்டுகின்றனர்.ஆசை என்பவர் பொழுதுபோக்காகவே ரேஷன் கடைக்கு வருகிறார்.

மற்ற நேரங்களில் ரேஷன் அரிசி கடத்தும் வியாபாரிகளுடன் தான் இவர் இருப்பார்.பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியை பொதுமக்களுக்கு அளிக்காமல் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்கிறார்.இதை வியாபாரிகள் வாங்கி கொண்டு மாவாக அரைத்து கேரளாவிற்கு அனுப்புகின்றனர்.

ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் சில பாமர பட்ட பொதுமக்கள் வீட்டில் அடுப்பு எரிவது இல்லை  என வருத்தம் அளிக்கிறது.ரேஷன் அரிசியை மொத்தமாக வியாபாரிகளிடம் விற்று பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி கிடைக்காமல் செய்யும் மேலாளர் ஆசை என்பவர் மீது  மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு அவரின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளனர்.மேலும் பொது மக்களுக்கு முறையாக ரேஷன் அரிசி சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கம்பம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் .

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து தினம்தோறும் சரக்கு வாகனங்கள் மூலம்  அண்டை மாநிலமான கேரளாவிற்கு கடத்தப்படும் நிகழ்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது .மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ???

Leave a Comment