கனடா நாட்டில் கடந்த சில காலமாக சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அந்த மோசமான நிலை என்பது அங்குள்ள குழந்தைகள் உணவு சாப்பிட பெற்றோர்கள் பட்டினி இருக்க வேண்டிய ஒரு மோசமான சூழல் உருவாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனடா நாட்டை பொறுத்தவரை தற்போது பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கிறார். இவர் கடந்த 2015 ஆண்டு முதல் அந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார். காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தார் இவர்.
இந்நிலையில் தற்போது கனடா நாட்டில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சூழல் உருவாகி உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள பெற்றோர்களில் 25% பேர்தான் தங்களுக்கு போதுமான அளவுக்கு உணவு கிடைப்பதாக கூறியுள்ளனர். மேலும் மீதம் உள்ளவர்கள் தங்கள் உணவு அருந்தாமல் இருந்தால் தான் தங்கள் குழந்தைகள் உணவு உண்ண முடியும் என்ற சூழ்நிலையில் உள்ளனர்.
இதற்கு காரணம் கனடா வி கடந்த சில ஆண்டுகளாகவே பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதி வீடு வாடகை அதிகரிப்பு , வேலை வாய்ப்பு குறைவு போன்றவற்றால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கனடா மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கனடாவில் 4 ல் ஒரு பங்கு மக்கள் தங்கள் உணவு உண்ணும் அளவை குறைத்துள்ளனர்.
அங்கு சத்து குறைவான உணவு பொருள் விலை குறைவாக உள்ளதால் வேறு வழியின்றி பலர் இந்த உணவை வாங்கி உண்ணும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் 84% பேர் சாப்பிடாமல் இருப்பதாக கனடா செய்தி தொடர்பாளர் சால்வேஷன் ஆர்மியின் ஜான் முர்ரே கூறியுள்ளார்.