ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை தமிழகம் என மாற்றியது போன்ற பல விஷயங்களில். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றமும் ஆளுநர் ரவியின் இந்த செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தான் ஆளுநர் ரவி அவரின் வாக்குரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 11 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோர் சென்னை வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறித்துவ நடுநிலைப்பள்ளியில் தங்களது வாக்கினை பதிவு செய்வார்கள்” என்று அறிவித்துள்ளது.
ஆளுநர் ரவிக்கு முன்பாக தமிழகத்தில் ஆளுநர்களாக இருந்த ரோசய்யா, சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் அவரவர் வாக்குகளை ஆந்திரா மற்றும் பஞ்சாப்பில் தான் செலுத்தினார்கள். ஆனால் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் ரவி அவரின் வாக்கை தமிழகத்திற்கு மாற்றி இருப்பது தமிழக அரசு மீதுள்ள மோதல் கூட காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.