வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண்! 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

0
68

வரதட்சனை கொடுமையால் உயிரிழந்த பட்டதாரிப் பெண். 100 சவரன் நகை கேட்டு தொல்லை!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்த பிரியங்காவிற்கு 24 வயதுதே ஆகியுள்ள நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா. இவருக்கும் பெங்களூரில் மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

திருமணமான இரண்டு மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பயங்கர பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது.இதனால் தாய்வீடு சென்று விட்ட பிரியங்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியங்காவின் சடலத்தை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் விசாரணையில் நிதிஷ்குமார் பிரியங்காவை வரதட்சணை கொடுமைக்கு வற்புறுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் நிதிஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசார் விசாரணையில் தெரியவந்தது,

பிரியங்காவிற்கும் நிரேஷ் குமாருக்கும் கடந்த ஆண்டு நடைபெற்ற திருமணத்தில் பிரியங்காவின் வீட்டார் 140 சவரன் நகைகளை வரதட்சணையாக போடுகிறோம் என்று கூறியுள்ளனர்.அந்த நிலையில் 40 சவரன் நகைகளை மட்டுமே போட்ட அவர்களால் மீதி 100 சவரன்களை போட முடியவில்லை. இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் தாய் வீட்டுக்கு சென்று விட்ட பிரியங்காவிற்கு மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.தொடர்ந்து நிரேஷ் குமாரும் அவரது குடும்பத்தினரும் பிரியங்காவை மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பிரியங்காவின் பெற்றோர்கள் நிரேஷ் குமாரிடம் பேசுகையில் நாங்கள் மீதம் உள்ள நகைகளை போடுகிறோம் என கால அவகாசம் கேட்டுள்ளனர் .அதனை மறுத்த நிரேஷ் குமாரும் அவரது குடும்பத்தினரும் மீதமுள்ள 100 சவரன்களை போட்டால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என்று மறுத்துள்ளனர்.

இதனால் பெரும் மன அழுத்தத்திற்கு உருவான பிரியங்கா மனமுடைந்து தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரியங்காவின் பெற்றோர்கள்  அளித்த புகாரில் நிரேஷ் குமாரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது. பிரியங்காவின் செல்போன் அழைப்புகளை விசாரித்து வருகின்றனர். 24 வயதே ஆன பிரியங்காவிற்கு நடந்த சோகம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
Kowsalya