தேனின் மகத்துவம்! உடலில் உள்ள இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!
ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாத உணவாக இருப்பது தேன் மட்டும்தான். தேன் என்பது பல நூறு வருடங்களாக மருத்துவ குணங்கள் நிறைந்தது முதன்மை பெற்ற வருகிறது. தேன் என்பது பல வகைகளில் நமக்கு கிடைக்கின்றது. தேனில் அதிகப்படியான அண்டி ஆக்சிடென்ட் ,விட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளது. பதிவின் மூலம் தேனின் பயன்கள் பற்றியும் அதன் மூலம் குணமாகும் நோய்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
சளி, இரும்பல், வறட்டு இருமல், தொண்டை கரகரப்பு போன்றவைகள் இருப்பவர்கள் காலையில் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் முற்றிலும் குணமாகும்.
தேன் இருதய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். உடல் பருமனை குறைப்பதற்காக இரவு தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
தேன் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. தேனை குடித்து வந்தால் உடலில் உண்டாகும் கெட்ட வகையான பாக்டீரியாக்கள் முற்றிலும் அழிக்க உதவுகிறது.