பச்சை நிறமான கடல் அடுத்தடுத்து உயிரிழந்த மீன்கள்! பேரழிவுக்கான அறிகுறியா?
தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென்று பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு இருப்பது பேரழிவுக்கான அறிகுறியா என்றும் பலர் சந்தேகித்து வருகின்றனர். இது பற்றி கூறுகையில், 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு மன்னர் வளைகுடாவில் கடல் நீரானது பச்சை நிறமாக தோற்றமளித்தது. இவ்வாறு தோற்றம் அளிப்பதற்கு ஒரு வித பாசிகள் தான் காரணம். இந்த பாசிகளுக்கு நாட்டிலூக்கா சிண்டி லெம்ஸ் என்று பெயர். இந்த பாசியானது சிவப்பு மற்றும் பச்சை என இரண்டு நிறங்களில் உள்ளது. இதில் எந்த பாசி அதிக அளவு வளர்கிறதோ அப்பாசியின் நிறத்திலேயே கடல் முழுவதும் தோற்றமளிக்கும்.
தற்பொழுது பச்சை நிறத்தில் உள்ள பாசிகள் அதிக அளவு வளர்ந்து உள்ளது. தற்பொழுது மழை பெய்து வருவதால் அந்த மழை நீர் கடலினுள் கலக்கிறது. அதில் கிடைக்கும் சத்துக்களை உண்டு இந்த பாசிகள் வளர்கிறது. மேலும் இவ்வாறு உண்பதால் இதிலிருந்து அமோனியா என்ற நச்சுத்தன்மை வெளி வருகிறது. அது மட்டும் இன்றி இந்த பாசிகள் வளரும் இடத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். அதனால் அப்பகுதிகளில் மீன்கள் வாழ்வது கடினம். பெரும்பாலும் மீன்கள் அவ்விடங்களில் உயிரிழந்து விடும்.
குறிப்பாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த பாசிகள் மன்னர் வளைகுடாவிற்கு வருகிறது. அரபிக்கடல் பகுதியில் இந்த பாசிகள் பெருமளவு வளர்ந்துள்ளது. அவ்வாறு வளரும் பாசிகள் நீரோட்டம் வழியாக மன்னர் வளைகுடா பகுதியை வந்து சேர்கிறது. இவ்வாறு ஆய்வில் விளக்கம் அளித்துள்ளனர்.